எஸ்.ஏ 20 லீக் கிரிக்கெட்: இறுதி போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்

image courtesy: Betway SA20 twitter
எஸ்.ஏ 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் அரைஇறுதியில் சன்ரைசர்ஸ் அணி, சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
செஞ்சூரியன்,
எஸ்.ஏ 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் சந்தித்தன.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்க்ராம் சதம் (100 ரன், 58 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) அடித்தார். அடுத்து களம் இறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்களே எடுக்க முடிந்தது. ரீஜா ஹென்ரிக்ஸ் 96 ரன்கள் (11 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசியும் பலன் இல்லை. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (இரவு 8 மணி) நடக்கும் இறுதி ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.






