பைக்கில் சென்றுகொண்டிருந்த தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்.. வைரல் வீடியோ


பைக்கில் சென்றுகொண்டிருந்த தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்.. வைரல் வீடியோ
x

image screengrab from video posted on x by @sachin_rt

சச்சினை பார்த்த உடன் அந்த ரசிகர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தனது பெயர் பொறித்த ஜெர்சி அணிந்து ஸ்கூட்டரில் சென்ற ரசிகரை சச்சின் சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் "என் மேல் அன்பு காட்டுவது மனதிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. எதிர்பார்க்கபடாத இடங்களில் இருந்து கிடைக்கும் அளவற்ற அன்பு வாழ்க்கைக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது." என பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சச்சின் காரில் எங்கேயோ சென்று கொண்டிருந்தபோது, முன்னால் பைக்கில் சச்சின் பெயருடன் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிந்து கொண்டு ரசிகர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

இதை பார்த்த சச்சின் அந்த ரசிகரை சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பின் தொடர்ந்து சென்று அவரை நிறுத்தி விமான நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டார். சச்சினை பார்த்த உடன் அந்த ரசிகர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார். உங்களிடம் பேசி அறிமுகமாக வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.

மேலும் சச்சின் அந்த ரசிகரை ஹெல்மெட் அணிந்து சென்றதற்கு வாழ்த்துக்கள். நல்ல முடிவு என்று கூறினார். மேலும் அந்த ரசிகர், உங்களின் புகைப்படங்களை எனது டைரியில் வைத்திருப்பதாக கூறி எடுத்து காட்டினார். அந்த டைரியை வாங்கி பார்த்த சச்சின் அந்த ரசிகருக்கு அதே டைரியில் ஒரு ஆட்டோகிராபையும் போட்டுக் கொடுத்தார். பின்னர் இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

அப்போது அந்த ரசிகர் என் வாழ்நாளில் என்னுடைய கடவுளை நான் நேரில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார். நீங்கள் என்னுடைய ஜெர்சியை அணிந்து கொண்டிருந்தீர்கள். அதை பார்த்த பிறகு தான் நான் உங்களை நிறுத்தினேன் என்று கூறி அந்த ரசிகருக்கு சப்ரைஸ் அளித்தார்.

மேலும் அந்த வீடியோவில் நான் காரில் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறேன். அவர் ஹெல்மெட் அணிந்திருக்கிறார். இதேபோன்று போக்குவரத்து விதியை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story