டி.என்.பி.எல் : மதுரை அணிக்கு எதிரான போட்டியில் சேலம் அணி பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல் : மதுரை அணிக்கு எதிரான போட்டியில் சேலம் அணி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது.

இன்று நடைபெறும் போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர் கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

சேலம் ஸ்பார்டன்ஸ் : ஜாபர் ஜமால், கோபிநாத், ஆர் கவின், டேரில் ஃபெராரியோ, எஸ் கணேஷ், பிரணவ் குமார், எஸ் அபிஷிக், முருகன் அஷ்வின், எம் கணேஷ் மூர்த்தி, ஜி பெரியசாமி, ஜி கிஷூர்

மதுரை பாந்தர்ஸ் : அருண் கார்த்திக், விக்னேஷ் ஐயர், கே ராஜ்குமார், என்.எஸ்.சதுர்வேத் ஜெகதீசன் கவுசிக், ரித்திக் ஈஸ்வரன், சன்னி சந்து, ஆர்.சிலம்பரசன், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், பி.சரவணன், பி.ராக்கி.


Next Story