எங்கள் நாட்டிற்காக விளையாட வாருங்கள்... அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு சஞ்சு சாம்சன் அளித்த பதில்


எங்கள் நாட்டிற்காக விளையாட வாருங்கள்... அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு சஞ்சு சாம்சன் அளித்த பதில்
x

திறமையான வீரராக வலம்வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம்,

இந்திய கிரிக்கெட்டில் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமாக வலம் வருபவர் சஞ்சு சாம்சன். மிகவும் திறமை வாய்ந்த வீரரான இவர், அண்டர் 19 கிரிக்கெட் காலத்தில் இருந்த ரசிகர்களிடையே பெயர் பெற்றவர்.

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர், கடந்த ஐபிஎல் போட்டியில் அந்த அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுவந்தார்.

இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டிலேயே அறிமுகமான சஞ்சு சாம்சன், இந்த 7 ஆண்டுகளில் வெறும் 16 டி20 போட்டி, 11 ஒருநாள் போட்டியில் தான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். அந்த அளவிற்கு சஞ்சு சாம்சனுக்கு, இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்காமல், பிசிசிஐ ஏமாற்றி இருக்கிறது.

ஒரு தொடரில் வாய்ப்பு வழங்கியும், மற்றொரு தொடரில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டும் வருகிறது. தனக்கு வழங்கப்படும் வாய்ப்பில் தனது திறமையை வெளிப்படுத்தியும், அவருக்கான இடம் மறுக்கப்படுகிறது. பிசிசிஐ அவரை அணியில் ஒரு இடத்தில் விளையாடும் திறமையான வீரராக கருதவில்லை என்பதை இது காட்டுகிறது.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காததால், அவரை இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகுமாறு அண்மையில் ரசிகர்களே கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், அயர்லாந்து கிரிக்கெட் வாரியம், சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட அவரிடம் கோரிக்கை விடுத்து உள்ளது.

அயர்லாந்து நாட்டு குடியுரிமை, கார் மற்றும் வீட்டு வசதி, இந்திய கிரிக்கெட்டிற்கு நிகராக வழங்கப்படும் ஊதியம் என அனைத்தையும் வழங்குகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து அயர்லாந்து அணிக்காக விளையாடுங்கள் அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அயர்லாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்றால், முதலில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால், சஞ்சு சாம்சன் நாட்டின் மீது உள்ள பற்றால், இந்த வாய்ப்ப வேண்டாம் என்று நிராகரித்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் தான் கடைசி வரை இருப்பேன். பிசிசிஐ அனுமதி அளித்தால் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்று பதில் அளித்துள்ளார். சஞ்சு சாம்சனின் இந்த முடிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.


Next Story