பள்ளி 20 ஓவர் கிரிக்கெட்: ராமச்சந்திரா அணி 'சாம்பியன்'


பள்ளி 20 ஓவர் கிரிக்கெட்: ராமச்சந்திரா அணி சாம்பியன்
x

சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பத்தி ராயுடு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

நெல்லை,

7-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நடந்து வந்தது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ராமச்சந்திரா பப்ளிக் பள்ளி- பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ராமச்சந்திரா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விரிஷங் கார்திக் 43 ரன்களும்,ஜெயந்த் பாலமுருகன் 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய பி.எஸ்.பி.பி. அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் ராமச்சந்திரா அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

ரித்திக் வர்ஷன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பத்தி ராயுடு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.


Next Story