அயர்லாந்துக்கு எதிரான தொடர்; அணிக்கு திரும்பும் இந்திய நட்சத்திர வீரர்....!
அயர்லாந்து அணிக்கெதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி ஆட உள்ளது.
மும்பை,
அயர்லாந்து அணிக்கெதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ராவை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணிக்காக விளையாடவில்லை. இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியிலும் அவர் களமிறங்கவில்லை.
இதனிடையே உடல்நலம் குணமாகி அவர் மீண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து அயர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் டி20 சர்வதேச போட்டிகளில் அவரை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 18, 20, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3 சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் அவரை களமிறக்குவது தொடர்பாக இந்திய தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.