கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன் சரியான வீரர் இல்லை - பாகிஸ்தான் முன்னாள் வீரர்


கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன் சரியான வீரர் இல்லை  - பாகிஸ்தான் முன்னாள் வீரர்
x

Image Courtesy : AFP 

வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் கேப்டன் பதவிக்கு சரியான வீரர் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா கூறியுள்ளார்.

இந்தியா- வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது. முதல்நாள் முதல் செசனில் மட்டும் வங்காளதேசம் சற்று ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2வது இன்னிங்க்ஸை டிக்ளேர்செய்து 513 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த நிலையில், வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், கேப்டன் பதவிக்கு சரியான வீரர் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா கூறியுள்ளார்.

டேனிஸ் கனேரியா கூறுகையில்

''லேசான காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் எபாடத் ஹொசைன் வெளியேறினார். எனினும், அதன்பின் களத்திற்குள் இறங்கிய அவருக்கு போதுமான அளவு பந்து வீசும் வாய்ப்பை சாகிப் அல் ஹசன் வழங்கவில்லை. மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கலித் அகமதுவை அவர் பயன்படுத்தவில்லை. அவருடைய கேப்டன்ஷிப் உயர்ந்த தரமாக இல்லை. வங்காளதேச வீரர்கள் அவரின் கேப்டன் பதவியின் கீழ் செயல்பட விரும்பவில்லை. லிட்டன் தாஸ் சிறந்த தேர்வாக இருப்பார். அவர் ஒருநாள் தொடரை எப்படி வென்றாடுத்தார் என்பதை நாம் பார்த்தோம். ஷகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை. என கூறினார்.


Next Story