மனைவி தன்னை அவதூறாக மிரட்டியதாக ஷிகர் தவான் புகார் - நீதிமனறம் நடவடிக்கை


மனைவி தன்னை அவதூறாக மிரட்டியதாக ஷிகர் தவான் புகார் - நீதிமனறம் நடவடிக்கை
x

தனது மனைவி ஆஷா முகர்ஜி தன்னை அவதூறாக மிரட்டியதாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவர் தனது புகழையும், கேரியரையும் கெடுத்து விடுவதாக அவரது மனைவி ஆஷா முகர்ஜி மிரட்டியதாக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் ஐபிஎல் உரிமையாளரான டெல்லி கேப்பிடல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி தீரஜ் மல்ஹோத்ரா முன் தனது புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவதூறான செய்திகளை அவர் பரப்பியதாகவும் தவான் கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து ஷிகர் தவானின் முன்னாள் மனைவி ஆஷா முகர்ஜி, தனது கணவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகளைப் பகிர்வதற்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

தவான் மீது முகர்ஜிக்கு "உண்மையான" குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தாக்கல் செய்வதைத் தடுக்க முடியாது என்று நீதிபதி ஹரிஷ் குமார் கூறினார்.

2012ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி ஷிகர்தவானும் - ஆஷாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தவானின் எட்டு வருட திருமணம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகர்ஜி, இந்திய கிரிக்கெட் வீரரை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

யார் இந்த ஆஷா முகர்ஜி...?

ஆஷா முகர்ஜி மெல்போர்னைச் சேர்ந்த முன்னாள் கிக்பாக்ஸர் ஆவார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடி உள்ளார்.

ஷிகர் தவானுடன் ஆஷா முகர்ஜி பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.. தவானின் முன்னாள் அணி வீரர் ஹர்பஜன் சிங் தம்பதியின் பொதுவான நண்பராக இருந்தார்.

ஷிகர் தவானை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஆஷா முகர்ஜி ஆஸ்திரேலிய தொழிலதிபரை முதலில் திருமணம் செய்து இருந்தார்.அவர்களூக்கு 2 குழந்தை உள்ளது.

ஈஷா முகர்ஜி அடிப்படையில் ஆங்கிலோ-இந்தியன், பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய தந்தை மற்றும் தாய்க்கு பிறந்தவர். ஆயிஷாவின் குடும்பம் அவர் பிறந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது, ஆஷா தற்போது மெல்போர்னில் உள்ளார்.ஆஷா ஆகஸ்ட் 27, 1975 இல் பிறந்தார் அவருக்கு இந்த ஆண்டு 48 வயதை எட்டுகிறார்.



Next Story