அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் சாதனை


அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் சாதனை
x

சுப்மான் கில் 109 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார்.

ஐதராபாத்,

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுப்மான் கில்லின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி திரில் 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 109 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் தனது 19-வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் ஆயிரம் ரன்களை அதிவேகமாக தொட்ட இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

ஒட்டுமொத்தத்தில் பாகிஸ்தானின் பஹர் ஜமான் தனது 18-வது இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை வரிசையில் 2-வது இடத்தை பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக்குடன் சுப்மான் கில் பகிர்ந்துள்ளார். இந்திய அளவில் ஷிகர் தவான், விராட் கோலி தங்களது 24-வது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.


Next Story