பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் சுப்மன் கில் சேர்ப்பு...!


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் சுப்மன் கில் சேர்ப்பு...!
x
தினத்தந்தி 14 Oct 2023 1:47 PM IST (Updated: 14 Oct 2023 2:17 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில். இவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறக்கப்பட்டார். சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த தட்டை அணுக்கள் குறைவாக இருந்ததால் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆனால், புதன்கிழமை நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் சுப்மன் கில் விளையாடவில்லை. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டத்தில் கில் விளையாடுவாரா? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் அய்யர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

பாகிஸ்தான்:

அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹரிஸ் ரால்ப், ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.


Next Story