சின்னசாமியில் சிக்சர் மழை: சென்னை சூப்பர் கிங்ஸ் 226 ரன்கள் குவிப்பு...!


சின்னசாமியில் சிக்சர் மழை: சென்னை சூப்பர் கிங்ஸ் 226 ரன்கள் குவிப்பு...!
x

image courtesy: IndianPremierLeague twitter

தினத்தந்தி 17 April 2023 9:32 PM IST (Updated: 17 April 2023 9:35 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 226 ரன்கள் குவித்தது.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க வீரரான கான்வே அதிரடியாக ஆடி சிக்சர் மழை பொழிந்தார். அவர் 45 பந்துகளில் 83 ரன்கள் (6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 20 பந்துகளில் 37 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் (2 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்தார்.

இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story