கொல்கத்தா: 'லார்ட்ஸ் பால்கனியை' திறந்து வைத்து தேசிய கொடியை அசைத்த சவுரவ் கங்குலி..!!


கொல்கத்தா: லார்ட்ஸ் பால்கனியை திறந்து வைத்து தேசிய கொடியை அசைத்த சவுரவ் கங்குலி..!!
x

Image Courtesy: ANI 

லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் கங்குலி தனது ஜெர்சியை கழற்றி சுழற்றியது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

கொல்கத்தா,

இங்கிலாந்துக்கு எதிராக 2002-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா 326 ரன்கள் இலக்கை துரத்தியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி வெற்றி ரன்களை அடித்த போது அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்றபடி தனது ஜெர்சியை கழற்றி சுழற்றியது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

இந்த நிலையில் தற்போது கங்குலியின் சொந்த ஊரான கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி அங்குள்ள மண்டபத்தில் லார்ட்ஸ் மைதான பெவிலியன் மாதிரியை வடிவமைத்துள்ளனர். இந்த பெவிலியன் மாதிரியை கங்குலி நேற்று திறந்து வைத்தார். பொது மக்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், கங்குலி இந்திய கொடியை அசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.


Next Story