இலங்கை நிதான ஆட்டம் - 7 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன் சேர்ப்பு


இலங்கை நிதான ஆட்டம் - 7 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன் சேர்ப்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 9:25 PM IST (Updated: 3 Jan 2023 9:30 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

மும்பை,

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், ஆரம்பமே இலங்கைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர் நிசங்கா 3 பந்தில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஷிவம் மாவி பந்தில் போல்ட் ஆனார். அடுத்து களமிறங்கிய தனஞ்ஜெய டி சில்வா 8 ரன்னில் வெளியேறினார்.

தற்போதைய நிலவரப்படி 7 ஓவர் முடியில் இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன் எடுத்துள்ளது. குசல் மெண்டஸ் 22 ரன்னிலும், அசலங்கா 11 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இலங்கை வெற்றிபெற 78 பந்துகளில் 119 ரன்கள் தேவை.


Next Story