ஆஷிஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் 155 ரன்களுக்கு அவுட்
இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 70 ரன்கள் தேவைப்படுகிறது.
லண்டன்,
2வது ஆஷிஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து தற்போது 7 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.
இக்கட்டான சூழ்நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ் 214 பந்துகளில் 155 ரன்கள் குவித்து கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 70 ரன்கள் தேவை. அதேவேளை, ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதால் ஆட்டம் பரபரப்படைந்துள்ளது.
Related Tags :
Next Story