பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் ? ரசிகர்கள் மகிழ்ச்சி


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் ? ரசிகர்கள் மகிழ்ச்சி
x

அகமதாபாத்தில் 14-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

அகமதாபாத்,

இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக உலக கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் சுப்மன் கில் பங்கேற்கவில்லை. இவருக்கு மாற்றாக இளம் வீரரான இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினார்.

இந்த நிலையில் , மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உடல் நலம் முன்னேறி வரும் சுப்மன் கில் அகமதாபாத்துக்கு சென்றடைந்தார்.

அங்கு அவர் தனது பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால்அகமதாபாத்தில் 14-ந்தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


1 More update

Next Story