நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால்.,என்னைவிட சுப்மன் கில்-ஐ தான் தேர்வு செய்வேன் - ஷிகர் தவான்
நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் சுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு சில போட்டிகளில் சொதப்பியதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து இஷான் கிஷன், கில் ஆகியோர் இரட்டை சதம் அடித்த நிலையில் ஷிகர் தவான் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை இழந்தார்.
இந்த நிலையில் நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் என்னையும் சுப்மன் கில்லையும் வைத்து யாராவது ஒருவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் சுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது ,
ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றபோது, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் சேர்ந்து எனக்கு போதுமான அளவு ஆதரவளித்தார். நான் எனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எனது பார்வை அடுத்த உலகக் கோப்பையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
2022 எனக்கு மிகவும் நன்றாக இருந்தது ., நான் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினேன். .ஆனால் கில் இரண்டு வடிவங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார் , எனது பார்ம் ஓரிரு தொடரில் சரிந்தபோது, அவர்கள் கில்-க்கு வாய்ப்பு கொடுத்தார்கள், அவர் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் விளையாடினார் . வங்காளதேச அணிக்கு எதிராக இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அசத்தினார், பிறகு ஒரு கணம் நான் அணியில் இருந்து வெளியேறிவிடலாம் என்று நினைத்தேன்
மேலும் நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் என்னையும் சுப்மன் கில்லையும் வைத்து யாராவது ஒருவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் சுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் .