இந்திய அணியில் தேர்வாக இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும்? - தேர்வுக்குழுவை சரமாரியாக சாடிய கவாஸ்கர்


இந்திய அணியில் தேர்வாக இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும்? - தேர்வுக்குழுவை சரமாரியாக சாடிய கவாஸ்கர்
x

இந்திய கிரிக்கெட் அணி வரும் 12-ம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

டெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் 12-ம் தேதி முதல் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மேற்கிந்திய தீவுகளுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

இதனிடையே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இந்திய வீரர்கள் பட்டியலில் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்குவாட், எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக புஜாராவுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்காதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறுகையில், ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார். இந்திய அணியில் தேர்வாவதற்கு சர்பராஸ் கான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும். அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம் ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும். அவரது திறமைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிசிசிஐ அவரிடம் கூற வேண்டும் அல்லது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதை சர்பராஸ் கான் நிறுத்த வேண்டும்' என்றார்.


Next Story