நெதர்லாந்தில் புதிய உணவகத்தை திறந்த சுரேஷ் ரெய்னா.!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரெய்னா, நெதர்லாந்தில் புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தற்போது ஐபிஎல் உட்பட அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் விலகிவிட்டார்.
சென்னை அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு மிகப்பெரியது.
இந்நிலையில், தற்போது 'ரெய்னா இந்திய உணவகம்' என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நிறுவியுள்ளார். அது குறித்த தகவலை அவர் சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சமையல் மீது அதீத ஆர்வம் கொண்ட ரெய்னா, தற்போது ஆம்ஸ்டெர்டேம் நகரில் புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் இந்த புதிய தொடக்கத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story