டி20 உலக கோப்பை தொடர்: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை சாம்பியன் அணியான இலங்கை அணி உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் விளையாட முதல் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கொழும்பு,
8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி-20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை சாம்பியன் அணியான இலங்கை அணி உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் விளையாட முதல் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளுடன் மோத வேண்டும். ஆசிய கோப்பையில் விளையாடிய வீரர்களில் பெரும்பாலான வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளன்ர். ஆசிய கோப்பையில் அறிமுகமான மதீஷ பத்திரனா, நுவான் துஷார மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர்.
டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்:-
தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்க குணதிலக்கா, பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சாமிக்க கருணாரத்னா, தில்ஷான் மதுசாங்க,பிரமோத் மதுஷன், துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா
காத்திருப்பு வீரர்கள்: அஷேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ
இதில் அணியில் இடம் பிடித்துள்ள துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா ஆகிய இருவரது உடற்தகுதியை பொறுத்தே அவர்கள் அணியில் சேர்க்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.