டி20 உலகக்கோப்பை- கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு


டி20 உலகக்கோப்பை- கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
x

கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும் இந்த நிலையில் இந்த உலககோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி ;

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி , இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாச்லன் பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் போல்ட், பின் ஆலன்.


Next Story