ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 362 ரன் குவிப்பு
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது.
மிர்புர்,
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 79 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. தனது 3-வது சதத்தை அடித்த நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 146 ரன்களும் (175 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்), மமுதுல் ஹசன் ஜாய் 76 ரன்களும் எடுத்தனர்.
முஷ்பிகுர் ரஹிம் (41 ரன்), மெஹதி ஹசன் மிராஸ் (43 ரன்) களத்தில் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் பவுலர்கள் எக்ஸ்டிரா வகையில் 15 நோ-பால் உள்பட 31 ரன்களை வாரி வழங்கினர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
Related Tags :
Next Story