கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜூலன் கோஸ்வாமியை கவுரவித்த இங்கிலாந்து அணி


கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜூலன் கோஸ்வாமியை கவுரவித்த இங்கிலாந்து அணி
x

தனது கடைசி போட்டியில் விளையாடும் இந்திய மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான் ஜூலன் கோஸ்வாமி பேட்டிங் செய்ய மைதானத்திற்கு நுழைந்தபோது இங்கிலாந்து அணி அவரை கவுரவித்தது.

லண்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெறுகிறார்.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இதில் 5 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது.

போட்டியின் போது இந்திய வீராங்கணை ஜூலன் கோஸ்வாமி பேட்டிங் செய்ய வந்தார். அப்போது இங்கிலாந்து வீராங்கணைகள் வரிசையாக நின்றுகொண்டு கைத்தட்டி அவரை கவுரவித்தனர். அப்போது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனது கடைசி போட்டியில் களமிறங்கிய ஜூலன் கோஸ்வாமிக்கு இது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.


Next Story