இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
டர்பன்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது போட்டி டர்பனில் இன்று நடைபெற இருந்தது.
இந்த நிலையில், டர்பனில் தொடர்ந்து மழைபெய்ததால் இந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்ட்டது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story