பரபரப்பின் உச்சம்..! கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்க விட்ட ரிங்கு சிங்..! கொல்கத்தா அணி அபார வெற்றி
ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெற செய்தார்.
ஆமதாபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று ஆமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி குஜராத் முதலில் பேட்டிங் செய்தது .இன்றைய ஆட்டத்தில் ஹார்திக் பாண்டியாவுக்கு பதில் , குஜராத் அணியின் கேப்டனாக ரஷித் கான் வழிநடத்தினார்.
அணியின் ஸ்கோர் 100 ஆக இருந்த போது கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அபினவ் மனோகர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.பின்னர் அவர் 53 ரன்களில் வெளியேறினார்.கடைசியில் விஜய் ஷங்கர் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார்.அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட் , சுயாஸ் சர்மா 1விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 205 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக ரஹ்மத்துல்லா குர்பாஸ் , நாயராயன் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினார். குர்பாஸ்15 ரன்களும் , ஜெகதீசன்6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் , நிதிஸ் ராணா இருவரும் இனைந்து சிறப்பாக விளையாடினர். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் குஜராத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் அடித்தார், மறுபுறம் நிலைத்து ஆடிய ராணா 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 83 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரசல் ,சுனில் நரைன் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விக்கெட் வீழ்த்தி ரஷித் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி ஓவரில் 29 ரன்கள் கொல்கத்தா அணிக்கு தேவைப்பட்டது. குஜாரத் அணியின் யாஷ் தயாள் வீசினார்.அப்போது ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெற செய்தார்.ரிங்கு சிங் 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார்.