ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து


ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி உலகக்கோப்பை தொடருக்கு  தகுதி பெற்றது நெதர்லாந்து
x

6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது

புலவாயோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது

ஸ்காட்லாந்த்து அணியில் சிறப்பாக விளையாடிய பிராண்டன் மெக்முல்லன் சதமடித்து அசத்தினார்.ரிச்சி பெரிங்டன் 64 ரன்கள் குவித்தார்.நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடியது.தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது . இதனால் 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பாஸ் டி லீடே சதமடித்து 123 ரன்கள் குவித்தார் .

இந்த வெற்றியால் உலகக்கோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது.


Next Story