இளம் இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடு தான் எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் - கம்மின்ஸ்


இளம் இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடு தான் எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் - கம்மின்ஸ்
x

Image Courtesy: AFP

இளம் இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடு தான் எங்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என கம்மின்ஸ் கூறியுள்ளார்.

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது, ஐ.பி.எல். கோப்பையை வென்றால் சிறப்பானதாக இருக்கும். ஆனால் தொடர்ந்து வெற்றி கண்டு வருவது ஏதாவது ஒரு கட்டத்தில் தடைபட தான் செய்யும்.

கடந்த 2 வருடங்களாக எனக்கு கேப்டன்ஷிப் சிறப்பானதாக அமைந்து இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு நான் எந்தவொரு 20 ஓவர் அணியையும் வழிநடத்தியது கிடையாது. எனவே போட்டியின் தொடக்கத்தில் என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடு தான் எங்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். கடந்த ஆட்டத்திற்கு பயன்படுத்திய ஆடுகளத்துக்கும், இறுதிப்போட்டி நடைபெற இருக்கும் ஆடுகளத்தின் தன்மைக்கும் வித்தியாசம் இருக்கும்.

ஆடுகளம் மற்றும் புள்ளி விவரங்கள் குறித்து நான் அதிகம் சிந்திப்பது கிடையாது. எங்களிடம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறந்த வீரர்கள் உள்ளனர். எனவே எங்களால் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story