'அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; விரைவில் களத்திற்கு திரும்புவேன்' - கே.எல்.ராகுல்


அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; விரைவில் களத்திற்கு திரும்புவேன் - கே.எல்.ராகுல்
x
தினத்தந்தி 10 May 2023 4:23 PM IST (Updated: 10 May 2023 4:25 PM IST)
t-max-icont-min-icon

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது ராகுலுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது.

மும்பை,

ஐபிஎல் தொடர் இந்தியாவில் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை புள்ளி பட்டியலில் குஜராத், சென்னை, மும்பை, லக்னோ அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆகிய தொடர்களில் இருந்து வெளியேறினார்.

தொடையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கே.எல்.ராகுல் தனது இஸ்டாகிராம் பக்கத்தில்,

அனைவருக்கும் வணக்கம். எனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. மருத்துவர்களுக்கும், மருத்துவ குழுவினர்களுக்கும் நன்றி. விரைவில் தேசிய அணிக்கு திரும்பும் அந்த தருணத்தை எதிர்பார்த்துள்ளேன். மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட கே.எல்.ராகுல் உடற்தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.




Related Tags :
Next Story