எங்களது வீரர்கள் போராடிய விதம் மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது- வங்காளதேச கேப்டன் பேட்டி


எங்களது வீரர்கள் போராடிய விதம் மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது- வங்காளதேச கேப்டன் பேட்டி
x

மிர்பூரில் நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது

மிர்பூர்,

மிர்பூரில் நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது , வெற்றியின் பாதையில் சென்றுகொண்டிருந்த வங்காளதேச அணி, கடைசி நேரத்தில் வெற்றியை கோட்டைவிட்டது.

போட்டி முடிந்த பிறகு வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் கூறுகையில், 'ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்கினர். இந்த ஆடுகளத்தில் நாங்கள் நன்றாக ஆடினோம். ஸ்ரேயாஸ் அய்யரும், அஸ்வினும் நெருக்கடிக்கு மத்தியில் அபாரமாக பேட்டிங் செய்தனர். எங்களுக்கு ஒரு விக்கெட் தான் தேவையாக இருந்தது. இவர்களில் ஒரு விக்கெட்டை சீக்கிரமாக வீழ்த்தி இருந்தால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும். என்றாலும் எங்களது வீரர்கள் போராடிய விதம் மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது' என்றார்.

'இந்த டெஸ்டில் எங்களது பீல்டிங் சரியில்லை. நிறைய கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டோம். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருந்தால் முதல் இன்னிங்சில் இந்தியாவை நாங்கள் 250 ரன்னுக்குள் ஆல்-அவுட் ஆக்கி இருக்கலாம். 10 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு எங்களது பவுலர்கள் 13-14 வாய்ப்புகளை உருவாக்க வேண்டி உள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story