தற்போதைய நிலையில் ஐ.பி.எல் தொடரின் சிறந்த தொடக்க ஜோடி இவர்கள் தான் - சுனில் கவாஸ்கர்


தற்போதைய நிலையில் ஐ.பி.எல் தொடரின் சிறந்த தொடக்க ஜோடி இவர்கள் தான் - சுனில் கவாஸ்கர்
x

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து தற்போதிலிருந்தே அனைத்து அணிகளும் ஐ.பி.எல் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஐ.பி.எல் தொடர், அதில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் அணிகள் குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய நிலையில் ஐ.பி.எல் தொடரின் சிறந்த தொடக்க ஜோடி ருதுராஜ் மற்றும் கான்வே தான் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோரின் இடது மற்றும் வலது கை தொடக்கக் கூட்டணி ஐ.பி.எல்-லில் சிறந்த தொடக்க ஜோடியாக நான் உணர்கிறேன். ஏனெனில் அவர்கள் கடந்த ஆண்டு எப்போதும் நல்ல தொடக்கத்தை வழங்கினர்.

மேலும், அவர்கள் அவ்வாறு ஆடும் போது 4வது மற்றும் 5வது வரிசையில் களம் இறங்கும் வீரர்கள் மீது அழுத்தம் குறைகிறது. எப்போதும் போல சென்னை அணி இந்த முறையும் கண்டிப்பாக முதல் நான்கு இடங்களுக்குள் வரும் என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் எந்த அணியையும் (பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா கேள்விக்கு..?) 'நிச்சயமாக ஆம்' என்று சொல்ல முடியாது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய விதத்தில், 16 பதிப்புகளில் 12-ல் தகுதி பெற்றுள்ளது. எனவே இது 13வது முறையாக நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story