மகனுக்காக எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த வாரிய முன்னாள் தலைவர் -அம்பத்தி ராயுடு குற்றச்சாட்டு


மகனுக்காக எனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த வாரிய முன்னாள் தலைவர் -அம்பத்தி ராயுடு குற்றச்சாட்டு
x

மகனுக்கு உதவுவதற்காக கிரிக்கெட் வாரிய தலைவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததாக அம்பத்தி ராயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஐதராபாத்

சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் அம்பத்தி ராயுடு. 37 வயதான ராயுடு இவர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர். அதனை தொடர்ந்து அவர் அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார். இதை தொடர்ந்து அவர் அவரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) முன்னாள் அதிகாரியால் தனது கிரிக்கெட் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பது குறித்து கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு பகிர்ந்துள்ளார்.

அம்பத்தி ராயுடு கூறியதாவது:-

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் எனது சிறுவயதிலிருந்தே அரசியல் தொடங்கியது. ஷிவ்லால் யாதவின் மகன் அர்ஜுன் யாதவ் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் துன்புறுத்தப்பட்டேன். அர்ஜுன் யாதவை விட நான் சிறப்பாக விளையாடியதால், அவர்கள் என்னை நீக்க முயன்றனர்.

அப்போது எனக்கு 17 வயதுதான். அர்ஜுன் யாதவ் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்ய விரும்பினர். அவர் இந்தியாவுக்காக விளையாடியது அவரால் அல்ல. அதற்கு நாம் என்ன செய்வது? ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் என் குழந்தைப் பருவத்திலேயே புற்றுநோய் பரவத் தொடங்கியது. தற்போது அது நான்காவது கட்டத்தை எட்டியுள்ளது. பிசிசிஐ தலையிட்டால்தான் நிலைமை மாறும். இல்லையெனில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தை யாராலும் சரி செய்ய முடியாது.

2003-04ல் இந்தியா-ஏ அணிக்காக சிறப்பாக விளையாடினேன். ஆனால், 2004ல் தேர்வுக் குழு மாறி, சிவலால் யாதவின் நெருங்கிய நண்பர்கள் குழுவில் இணைந்ததால், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டதும் தவறு. நான்கு வருடங்களாக யாரையும் என்னிடம் பேசவிடாமல் தடுத்தனர்.

போட்டிக்கு முந்தைய நாள், ஷிவ்லால் யாதவின் தம்பி குடித்துவிட்டு வந்து வீட்டின் முன் நின்று திட்டுவது வழக்கம். அவர்கள் என்னை மனரீதியாக காயப்படுத்த முயன்றனர் என கூறி உள்ளார்.


Next Story