திருவண்ணாமலை: கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்.ஐ. உட்பட 5 காவலர்கள் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்.ஐ. உட்பட 5 காவலர்களை, பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கண்ணமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. அருள், தானிப்பாடி காவல் நிலைய தலைமை காவலர்கள் யூஜின் நிர்மல், சிவா , கீழ் கொடுங்கலூர் காவல் நிலைய தலைமை காவலர் ஹரி, செங்கம் காவல் நிலைய தலைமை காவலர் சோலை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் நேற்று வரை 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story