இது தான் தோல்விக்கு காரணம்..! வெளிப்படையாக பேசிய கேப்டன் தோனி..!


இது தான் தோல்விக்கு காரணம்..! வெளிப்படையாக பேசிய கேப்டன் தோனி..!
x

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

சென்னை,

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் ஆடின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செயவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணியில்'கான்வே 92 ரன்கள் குவித்தார்

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது ,

மிடில் ஓவரில் இரண்டு ஓவர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டிய இடத்தில் மோசமாக பந்து வீசினோம். நங்கள் வீசிய 2 மோசமான ஓவர்கள் பாதிப்பாக அமைந்தது . பேட்டர்கள் கூடுதலாக 10 ரன்கள் எடுத்திருக்கலாம் ..ஆனால் இது சமமான ஸ்கோர் தான் .ஆடுகளம் நன்றாக இருந்தது. எங்கள் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ரன்களை குவித்து வருகின்றனர்.. நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என கூறினார்.


Next Story