உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை "புக் மை ஷோ" தளத்தில் நடைபெறும்...!


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை புக் மை ஷோ  தளத்தில் நடைபெறும்...!
x
தினத்தந்தி 23 Aug 2023 10:30 PM IST (Updated: 23 Aug 2023 10:58 PM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை "புக் மை ஷோ" தளத்தில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை "புக் மை ஷோ" தளத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது.

உலகக் கோப்பை 2023 தொடரில் மொத்தம் 58 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பத்து பயிற்சி ஆட்டங்களும் அடங்கும். டிக்கெட் விற்பனை நாளை (ஆகஸ்ட் 24) துவங்கி, செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடரின் ஒவ்வொரு கட்டம் மற்றும் போட்டிகளுக்கான டிக்கெட்கள் பலக்கட்டங்களாக விற்பனை செய்யப்பட உள்ளன.


Next Story