டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் - நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்
நாளை முதல் டிஎன்பிஎல் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ,
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் வரும் ஜூன் 12 தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கிறது கோவை, திண்டுக்கல் சேலம் திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் இறுதிப்போட்டி உட்பட 32 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நாளை முதல் டிஎன்பிஎல் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் விலையை பொறுத்தே நேரடி டிக்கெட் விற்பனை தொடங்கும் என டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story