டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு


டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு
x

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நெல்லை,

டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்துடன் சேர்த்து இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் இதுவரை லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

6 போட்டிகளில் ஆடியுள்ள பால்சி திருச்சி அணி 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் உள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. அதே வேளையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியாது என்பதால் கட்டாய வெற்றி நெருக்கடியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களம் இறங்குகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story