டிஎன்பிஎல்: திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் இன்று மோதல்...!


டிஎன்பிஎல்: திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் இன்று மோதல்...!
x

Image Courtesy: @TNPremierLeague

தினத்தந்தி 3 July 2023 10:59 AM GMT (Updated: 3 July 2023 1:41 PM GMT)

டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.

நெல்லை,

டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்துடன் சேர்த்து இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் இதுவரை லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

6 போட்டிகளில் ஆடியுள்ள பால்சி திருச்சி அணி 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் உள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.

அதே வேளையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியாது என்பதால் கட்டாய வெற்றி நெருக்கடியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களம் இறங்குகிறது. ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.


Next Story