டி.என்.பி.எல் இறுதிப்போட்டி : மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்


டி.என்.பி.எல் இறுதிப்போட்டி : மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
x
தினத்தந்தி 31 July 2022 7:57 PM IST (Updated: 31 July 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

கோவை,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்போட்டி இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று அரங்கேறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (3 முறை) என்ற பெருமைக்குரிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளதால் அந்த அணி பட்டத்தை வெல்ல தீவிர முனைப்பு காட்டும். மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

இந்த நிலையில் வழக்கமாக 7.15 மணிக்கு தொடங்கும் டி.என்.பி.எல் போட்டி இன்று மழை காரணமாக தாமதம் ஆகியுள்ளது. இதனால் இதுவரை இப்போட்டியில் டாஸ் போடப்படவில்லை. இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கபட்டால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story