டி.என்.பி.எல் : திருச்சி அசத்தல் பந்துவீச்சு - சேலம் அணி 87 ரன்களுக்கு ஆல் அவுட்


டி.என்.பி.எல் : திருச்சி அசத்தல் பந்துவீச்சு - சேலம் அணி 87 ரன்களுக்கு ஆல் அவுட்
x

Image Tweeted By @TNPremierLeague

19.5 ஓவர்களில் சேலம் அணி 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டானது.

சேலம்,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் 24-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பைடன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் மோதி வருகின்றன. இரு அணிகளும் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.தொடக்க வீரராக களமிறங்கிய அக்ஷய் ஸ்ரீனிவாசன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவர் தொடந்து வந்த வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

கேப்டன் முருகன் அஸ்வின் 13 ரன்களில் அதீக் உர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கோபிநாத் 24 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19.5 ஓவர்களில் சேலம் அணி 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டானது. திருச்சி அணி தரப்பில் ரஹீல் ஷா, அதீக் உர் ரஹ்மான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 88 ரன்கள் என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.


Next Story