ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி ரெடி- பிசிசிஐ வெளியிட்ட வீடியோ


ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி ரெடி- பிசிசிஐ வெளியிட்ட வீடியோ
x

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

மொகாலி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் நாளை மொகாலியில் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துகிறார். கடைசி ஆட்டத்திற்கு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட இந்திய அணி தயாராக உள்ளது என்பதை குறிக்கும் வகையில் பிசிசிஐ வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.


Next Story