பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக்கொடுத்த டோனி - வைரல் வீடியோ..!


பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக்கொடுத்த டோனி - வைரல் வீடியோ..!
x
தினத்தந்தி 24 March 2023 2:22 AM GMT (Updated: 24 March 2023 2:23 AM GMT)

பிராவோவுக்கு சி.எஸ்.கே அணி கேப்டன் டோனி விசில் அடிக்க கற்றுக்கொடுத்தார்.

சென்னை,

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் அவ்வப்போது அணியின் சமூக வலைதளங்களில் வெளியீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நம்ம ஊரு சென்னைக்கு விசில் போடுங்க பாடலுக்கு அணியின் கேப்டனான எம்.எஸ். டோனி பந்து வீச்சு பயிற்சியாளரான பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் லைக்குகளை அளித்தும் வருகின்றனர்.




Next Story