முத்தரப்பு டி20 கிரிக்கெட்; நெதர்லாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற அயர்லாந்து


முத்தரப்பு டி20 கிரிக்கெட்; நெதர்லாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற அயர்லாந்து
x

Image Courtesy: @cricketireland

அயர்லாந்து தரப்பில் மார்க் அடெய்ர், க்ரேக் யங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ஹேக்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.

இந்த தொடரில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் ஆட உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த 3 அணிகளும் முத்தரப்பு டி20 தொடரில் ஆடின. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 6வது டி20 போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக டாக்ரெல் 53 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 3 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து திரில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓ'டவுட் 60 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் மார்க் அடெய்ர், க்ரேக் யங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

1 More update

Next Story