யு-19 மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வெற்றி; நண்பர்களுடன் துணை கேப்டன் உற்சாக நடனம்: வைரலான வீடியோ


யு-19 மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வெற்றி; நண்பர்களுடன் துணை கேப்டன் உற்சாக நடனம்: வைரலான வீடியோ
x

யு-19 மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய துணை கேப்டன் நண்பர்களுடன் உற்சாக நடனம் ஆடிய வீடியோ வைரலானது.


புதுடெல்லி,


தென் ஆப்பிரிக்காவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஜனவரி 29-ந்தேதி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற யு-19 இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் சுவேதா ஷெராவத் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

டெல்லியில் வந்திறங்கிய அவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஜீப் ஒன்றில் வைத்து வரவழைத்து, உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேளதாளங்கள் முழங்க, ஊர்வலம் அழைத்து சென்றனர்.

திடீரென வாகனத்தின் முன்பு அமர்ந்திருந்த சுவேதா கீழிறங்கி ஓடி சென்று, தனது நண்பர்களுடன் ஒன்றாக உற்சாக நடனம் ஆடினார். அவருடன் தோழிகளும் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



Next Story