ஆட்டத்தின் முக்கிய தருணம்: சிக்சரை தடுத்து நிறுத்திய விராட் கோலி - வைரல் வீடியோ...!


ஆட்டத்தின் முக்கிய தருணம்: சிக்சரை தடுத்து நிறுத்திய விராட் கோலி - வைரல் வீடியோ...!
x
தினத்தந்தி 18 Jan 2024 1:51 AM IST (Updated: 18 Jan 2024 6:12 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானை 2வது சூப்பர் ஓவரில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.

பெங்களூரு,

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது. இரு அணிகளின் ரன்களும் சமன் அடைந்ததால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது. முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியாவும் 16 ரன்கள் எடுத்ததால் 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

2வது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 11 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் விராட் கோலி சிக்சரை தடுத்த நிகழ்வு இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. ஆட்டத்தின் 17வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார்.

அந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற 20 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஆப்கானிஸ்தான் வீரர் ஜனத் சிக்சர் விளாச முற்பட்டார். ஆனால், பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி பந்து சிக்சர் செல்வதை தடுத்து நிறுத்தினார். அவரது பீல்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப்பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிக்சருக்கு செல்லவிருந்த பந்தை விராட் கோலி அருமையான பீல்டிங் மூலம் தடுத்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.




Next Story