இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விராட்கோலி; ஒரு போஸ்ட் போடுவதற்கு எவ்வளவு தெரியுமா?


இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விராட்கோலி; ஒரு போஸ்ட் போடுவதற்கு எவ்வளவு தெரியுமா?
x
தினத்தந்தி 28 Sept 2022 5:25 PM IST (Updated: 28 Sept 2022 5:26 PM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி இடம் பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் 15 இடத்திற்குள் இடம் பெற்றுள்ளார்.

உலகில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலமாக கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்து வருகிறார். இவர் ஒரு பதிவிற்கு சுமார் 19 கோடி பெறுகிறார். இந்த பட்டியலில் கைலி ஜென்னர், லியோனல் மெஸ்ஸி, செலினா கோம்ஸ் மற்றும் டுவைன் 'தி ராக்' ஜான்சன் ஆகியோர் முதல் 5 இடங்களில் இடம் பெற்று உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்த பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளார். அவரை இன்ஸ்டாகிராமில் 20 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் ஒரு போஸ்டிற்கு 8 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்.

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் விராட்கோலி உள்ளார்.

1 More update

Next Story