நிருபர் கேட்ட கேள்விக்கு பிரியாணியை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்த வாஷிங்டன் சுந்தர்


நிருபர் கேட்ட கேள்விக்கு பிரியாணியை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்த வாஷிங்டன் சுந்தர்
x

முதல் டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது

ராஞ்சி,

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார், மேலும் பந்துவீச்சில் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்

இந்த நிலையில் தோல்வி குறித்து செய்தியாளரிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர்:

நாங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வந்திருக்கும். ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இது போன்ற ஆடுகளத்தை நீங்கள் எப்போது ஆவது விளையாட நேரிடும்.இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறினார். வாஷிங்டன் சுந்தரின் இந்த பதிலுக்கு ஆட்சேபனை தெரிவித்த செய்தியாளர் ஒருவர், தொடக்க வீரர்களை மாற்றி விடலாமே என கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த வாஷிங்டன் சுந்தர் மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமான பிரியாணி, ஹோட்டலில் கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள் அதன் பிறகு ஹோட்டலுக்கு செல்லாமல் இருப்பீர்களா? டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது. இந்த மோசமான நாள் யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். ஏன் நியூசிலாந்து அணி ராய்ப்பூரில் 108 ரன்கள் ஆட்டம் இழந்தார்களே? இதன் காரணமாக நியூசிலாந்து அணி டாப் ஆர்டரை மாற்றினார்களா என்ன? இது ஒரு விளையாட்டுப் போட்டி. இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது போன்ற மோசமான நாட்களில் நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். விளையாட்டில் எந்த அணியும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்


Next Story