3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்


3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
x

Image Courtesy : Twitter ICC 

பாகிஸ்தான் அணியில் சதாப் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முல்டன்,

வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு சென்று ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது,தொடர்நது நடைபெற்ற 2வது போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது .

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக் - ஜமான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜமான் ஆட்டமிழந்தார். பின்னர் ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் அரைசதம் கடந்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணியில் சதாப் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து 270 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.


Next Story