இந்தியாவுக்கு எதிரான 4வது டி20: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு


இந்தியாவுக்கு எதிரான 4வது டி20: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு
x

இந்தியாவுக்கு 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

புளோரிடா,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 4வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இன்று நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்) , சஞ்சு சம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஷ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்.

வெஸ்ட் இண்டீஸ்: பிரண்டன் கிங், கெயல் மெயிஸ், ஷெய் ஹொப்ஸ், நிகோலஸ் புரன், ரவ்மென் பவுல் (கேப்டன்), ஷிம்ரன் ஹெட்மயர், ஜெசன் ஹோல்டர், ரொமரொ ஷெபர்ட், ஒடின் ஸ்மித், அலெல் ஹொசினி, ஒபெ மெகொய்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story