என்ன ஒரு அற்புதமான வீரர், அவருக்கு எதிராக நான் பயப்படும் ஒரு விஷயம் என்னவென்றால் - பும்ராவை பாராட்டிய டி வில்லியர்ஸ்


என்ன ஒரு அற்புதமான வீரர், அவருக்கு எதிராக நான் பயப்படும் ஒரு விஷயம் என்னவென்றால்  - பும்ராவை பாராட்டிய டி வில்லியர்ஸ்
x

Image Courtesy: AFP

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

கேப்டவுன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து திரில் வெற்றி பெற்றது. இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா 106 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் இரட்டை சதமும், சுப்மன் கில் சதமும் அடித்தனர். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் காரணமாக பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பும்ரா அற்புதமான பவுலர் என்றும், பும்ராவை எதிர்கொள்ளும் போது அவரது யார்க்கர் பந்துகள் தமக்கு அச்சுறுத்தலை கொடுத்ததாகவும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பும்ரா அபாரமாக பந்து வீசினார். பும்ரா என்ன ஒரு அற்புதமான பவுலர். அவர் சிறப்பாக பந்து வீசி மற்ற இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ளினார். இருப்பினும் அவர்கள் பும்ரா சிறப்பாக பந்து வீசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். இது தனிநபர் விளையாட்டு அல்ல. அதுவே இந்திய பவுலிங் கூட்டணியில் நான் விரும்பும் அம்சமாகும்.

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் பும்ராவுக்கு யார்க்கர் பந்துகள் தான் பெரிய பலமாகும். பும்ராவுக்கு எதிராக நான் விளையாடும் போதெல்லாம் அவரின் யார்க்கர் பந்துகள் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுக்கக் கூடியது என்று நான் நினைப்பேன். யார்க்கர் பந்துகளை வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கூட அவர் நிறைய விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story