விராட் கோலி யார்? பிரபல யூடியூபரிடம் கேள்வி கேட்ட ரொனால்டோ...!


விராட் கோலி யார்? பிரபல யூடியூபரிடம் கேள்வி கேட்ட ரொனால்டோ...!
x

விராட் கோலி கிரிக்கெட்டில் படைத்து வரும் பல சாதனைகளால் விளையாட்டில் மட்டுமல்லாது உலகெங்கிலும் மிக பிரபலமானவர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் படைத்து வரும் பல சாதனைகளால் விளையாட்டில் மட்டுமல்லாது உலகெங்கிலும் மிக பிரபலமானவர். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை 265 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபரான ஸ்பீடு, பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரரான ரொனால்டோ நசாரியோவை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவருடன் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் அவர்கள் சந்திப்பின்போது ஸ்பீடு, ரொனால்டோ நசாரியோவிடம் விராட் கோலியை உங்களுக்கு தெரியுமா இல்லையா என்று கேட்டார். அதற்கு ரொனால்டோ "விராட் கோலி யார்? அவரது பெயர் எனக்கு தெரியாது" என்றார்.

உடனே ஸ்பீடு, ரொனால்டோவிடம் கோலியின் போட்டோவை காண்பித்தார். கோலியின் முகத்தை பார்த்ததும் அவரை அடையாளம் கண்டுகொண்ட ரொனால்டோ, ஸ்பீடிடம் 'ஆம் நிச்சயமாக இவரை எனக்கு தெரியும்' என்று புன்னகையுடன் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story