வாய்ப்புக்காக வீரர்கள் காத்திருக்கும்போது கே.எல்.ராகுலை ஏன் தேர்வு செய்ய வேண்டும் ? - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி


வாய்ப்புக்காக வீரர்கள்  காத்திருக்கும்போது கே.எல்.ராகுலை ஏன் தேர்வு செய்ய வேண்டும் ?  -  இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 12 Feb 2023 4:28 PM IST (Updated: 12 Feb 2023 4:30 PM IST)
t-max-icont-min-icon

"கேஎல் ராகுலின் திறமை மற்றும் செயல்பாடுகளில் எனக்கு நிறைய மரியாதை உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அவரது செயல்பாடுகள் இல்லாமல் மிகவும் மோசமாக இருப்பது சோகத்தை கொடுக்கிறது

நாக்பூர்,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன்களும், இந்தியா 400 ரன்களும் குவித்தது. இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல். ராகுல் 20 ரன்களில் வெளியேறினார்.மேலும் வங்காளதேசத்துக்கு எதிராக டெஸ்டில் 22 ,23 ,10 ,2 ஆகிய ரன்களை அடித்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார் .இதனால் அவர் மீது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ராகுல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் ,

"கேஎல் ராகுலின் திறமை மற்றும் செயல்பாடுகளில் எனக்கு நிறைய மரியாதை உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அவரது செயல்பாடுகள் இல்லாமல் மிகவும் மோசமாக இருப்பது சோகத்தை கொடுக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 8 வருடங்களுக்கு மேல் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் வெறும் 34 பேட்டிங் சராசரியை கொண்டுள்ளது மிகவும் சுமாரானது"

டாப் பார்மில் இந்தியாவுக்காக விளையாட காத்திருக்கும் நிறைய வீரர்களுக்கு மத்தியில் இவ்வளவு வாய்ப்புகளை வேறு வீரர்கள் பெற்றதாக எனக்கு தோன்றவில்லை. சுப்மன் கில் அசத்தலான பார்மில் இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வரும் சர்பராஸ் கான் ராகுலுக்கு பதிலாக விளையாட தகுதியானவர். இருப்பினும் இங்கே சிலர் முடிவின்றி வாய்ப்புகளை பெறுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்கிறார்கள். ஆனால் சிலர் சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு பெறுவதற்கு மறுக்கப்படுகிறார்கள்"

. சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்ட அஸ்வின் துணை கேப்டனாக இருக்க வேண்டும். இல்லையென்றால் புஜாரா அல்லது ஜடேஜா இருக்கலாம். டெஸ்ட் போட்டிகளில் ராகுலை விட மயங்க அகர்வால், விஹாரி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ராகுலின் தேர்வு செயல்பாடுகளை பொறுத்ததல்ல மாறாக விருப்பத்தின் அடிப்படையிலானது. அவர் 8 வருடங்களாக தொடர்ந்து தொடர்ச்சியற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்"

அஸ்வினுக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது, டெஸ்ட் வடிவத்தில் துணை கேப்டனாக இருக்க வேண்டும், இல்லையென்றால் சேதேஷ்வர் புஜாரா அல்லது ரவீந்திர ஜடேஜா இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் ராகுலை விட மயங்க் அகர்வால் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார், அதேபோல் ஹனுமா விஹாரியும் செய்தார். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இந்தியாவின் மகத்தான வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்" என்று கூறினார்.

மேலும் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது ,

இதில் கேஎல் ராகுல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்றாகவே விளையாடி வருகிறார். அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். கண்டிப்பாக டெல்லியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் களம் இறக்கப்படுவார்..

நான் ஏன் ராகுலுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறேன் என்றால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் சொல்வது போல் கடினமான ஆடுகளத்தில் கே எல் ராகுல் தென்னாப்பிரிக்காவில் சதம் அடித்தார். அவருக்கு சிறப்பான திறமை இருக்கிறது.

என தெரிவித்துள்ளார்


Next Story